×

தொடரும் பிரியங்காவின் தேர்தல் வாக்குறுதி இலவச சிலிண்டர், பஸ் பயணம்

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர், பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி அறிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.  காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி நாள்தோறும் புதுப்புது அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றார். இந்நிலையில் நேற்று பிரியங்கா காந்தி தனது டிவிட்டர் பதிவில், ‘உத்தரப்பிரதேச பெண்களுக்கு காங்கிரஸ் கட்சி தனி தேர்தல் வாக்குறுதிகளை உருவாக்கி உள்ளது. உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த எனதருமை சகோதரிகளே., உங்களுடைய ஒவ்வொரு நாளும் போராட்டம் நிறைந்ததாக இருக்கின்றது. காங்கிரஸ் கட்சி இதனை புரிந்து கொண்டு பெண்களுக்காக பிரத்யேக தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளது. மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும். அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். விதவைகளுக்கு மாதம் ₹1000 வழங்கப்படும்’ என குறிப்பிட்டுள்ளார்….

The post தொடரும் பிரியங்காவின் தேர்தல் வாக்குறுதி இலவச சிலிண்டர், பஸ் பயணம் appeared first on Dinakaran.

Tags : Priyanka ,Lucknow ,Congress ,Uttar Pradesh ,Dinakaran ,
× RELATED சிறுவர்களுக்கு கால்பந்து பயிற்சி...