×

மணிப்பூர் பிளவுபடவில்லை; இந்தியாவின் ஒரு பகுதியாகதான் இப்போதும் இருக்கிறது: ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி ராணி

டெல்லி: ராகுலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.பிக்கள் மோடி, மோடி என முழக்கமீட்டுள்ளனர். ஊழல் வாரிசு அரசியலுக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இராணி கூறியுள்ளார். ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிராக ஒன்றிய அமைச்சர்கல் ஆவேசமாக பேசி வருகின்றனர்.

மிக மோசமான பேச்சை நாம் இங்கு கேட்டோம், அதை வன்மையாக கண்டிக்கிறோம் என்று கூறினார். ஊழலை இந்தியாவுக்கு அறிமுகம் செய்தது காங்கிரஸ் தான். நீங்கள் இந்தியா கிடையாது ஊழலை இந்தியாவுக்கு அறிமுகம் செய்தது காங்கிரஸ் தான் என்று ஸ்மிருதி இராணி கூறியுள்ளார். பாரத மாதாவை கொன்றுவிட்டிர்கள் என்று கூறியதை காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆமோதித்ததற்கு ஸ்மிருதி ராணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். காஷ்மீர் பண்டிட்களுக்காக காங்கிரஸ் என்ன செய்தது? என்று ஸ்மிருதி இரானி கேள்வி எழுப்பியுள்ளார். காஷ்மீர் பண்டிட்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை சுட்டிக்காட்டி ஸ்மிருதி இரானி பேசி வருகிறார்.

காஷ்மீர் பண்டிட்களுக்கு எப்போது நியாயம் கிடைக்கும் என்று ஸ்மிருதி இரானி கூறியுள்ளார். சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின் போது பெரும் கொடுமைகள் மக்களுக்கு இழைக்கப்பட்டன. மணிப்பூர் பிளவுபடவில்லை; இந்தியாவின் ஒரு பகுதியாகதான் இப்போதும் இருக்கிறது. காஷ்மீர் சிறப்பு பிரிவு 370 நீக்கப்பட்டதால் பெண்கள் பாதுகாப்புடன் இருக்கிறார்கள். பாரத் என்றால் வட இந்தியா மட்டும் தானா என காங்கிரஸ் விளக்க வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி ராணி கூறியுள்ளார்.

The post மணிப்பூர் பிளவுபடவில்லை; இந்தியாவின் ஒரு பகுதியாகதான் இப்போதும் இருக்கிறது: ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி ராணி appeared first on Dinakaran.

Tags : Manipur ,India ,Union Minister ,Smriti Queen ,Delhi ,Rahul ,Rajha ,Modi ,Smriti Rani ,
× RELATED மணிப்பூரில் நடந்த நிர்வாண ஊர்வலம்; 2...