×

ஆக.11ம் தேதி முதல் 15ம் தேதி வரை தாம்பரம் – நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: ஆகஸ்ட் 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை தாம்பரம் – நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஆக.11 முதல் 15ம் தேதி வரை தொடர் விடுமுறையை ஒட்டி பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் ரயில்களில் கூட்ட நெரிசல் ஏற்படும். இந்த கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு தாம்பரம் – நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வரும் 11ம் தேதி மாலை 5க்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06051) மறுநாள் காலை 4.15க்கு ரயில் நெல்லையை அடையும்.

இதேபோல் ஆகஸ்ட் 12ம்தேதி மாலை 5.50க்கு நெல்லையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் ( 06052) மறுநாள் காலை 4.10க்கு தாம்பரம் சென்றடையும். தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி ரயில் நிலையங்களில் சிறப்பு ரயில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் சிறப்பு ரயில் நின்று செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஆக.11ம் தேதி முதல் 15ம் தேதி வரை தாம்பரம் – நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Thambaram ,Nedal ,Railway ,Chennai ,Nadal ,Nolam ,Southern Railway ,
× RELATED ஜேஇஇ நுழைவு தேர்வில் மதிப்பெண்...