×

நாரணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சைக்கிள் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும்

*மாணவர்கள் கோரிக்கை

சிவகாசி : சிவகாசி அருகே நாரணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சைக்கிள்களை நிறுத்துவதற்கு ஸ்டாண்ட் வசதி இல்லாததால், வெளியே ரோட்டில் நிறுத்துகின்றனர். இதனால் பாதுகாப்பு இல்லாதேதாடு, விரைவில் சேதமாகும் நிலையால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.சிவகாசி அருகே நாரணாபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இதில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சைக்கிள்களில் வருகின்றனர். பள்ளி வளாகத்தில் ஆசிரியர்களின் வாகனங்கள், மாணவ, மாணவியரின் சைக்கிள்கள் நிறுத்த போதிய இடவசதி இல்லை. சைக்கிள்கள் பள்ளியின் பிரதான கேட்டிற்கு வெளியே நிறுத்தப்படுகின்றன.

இதனால் மழை, வெயில் காலங்களில் அவற்றில் பழுது ஏற்படுகிறது. சாலையில் சைக்கிள் நிறுத்தப்பட்டுள்ளதால் அந்த வழியாக செல்லும் கனரக வாகனங்கள் சிரமம் அடைகின்றன. அடிக்கின்ற வெயிலுக்கு பெரும்பாலான சைக்கிள்களில் காற்று இறங்கிவிடுகின்றது. இதனால் மாணவ, மாணவிகள் மாலையில் வீடு திரும்ப முடியாமல் சிரமம் அடைகின்றனர். சைக்கிள் பழுதடைந்தால் அதை சரிசெய்ய மாணவர்கள் சிரமப்படுகின்றனர். பாதுகாப்பான முறையில் சைக்கிள்களை நிறுத்த சைக்கிள் ஸ்டாண்ட் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

The post நாரணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சைக்கிள் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Naranapuram Government High School ,Sivakasi ,Dinakaran ,
× RELATED சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து..!!