×

பாவூர்சத்திரம் மார்க்கெட்டிற்கு வரத்து குறைந்தது கேரள வியாபாரிகள் குவிவதால் வாழைத்தார் விலை எகிறியது

பாவூர்சத்திரம் : பாவூர்சத்திரம் காமராஜர் தினசரி காய்கறி மார்க்கெட்டில் வரத்து குறைவால் வாழைத்தார் விலை எகிறியது. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காமராஜர் தினசரி மார்க்கெட்டிற்கு ஏரல், குரும்பூர், திருச்செந்தூர், ஆரல்வாய்மொழி, தூத்துக்குடி, குரும்பூர், நாசரேத், காவல்கிணறு, வள்ளியூர் மற்றும் அம்பாசமுத்திரம், ஆலங்குளம், முக்கூடல், விக்கிரமசிங்கபுரம், பொட்டல்புதூர், அடைச்சாணி, இடைகால்,ஆழ்வார்குறிச்சி, கடையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலிருந்தும் இருந்தும் ராஜபாண்டி, துவரங்காடு, சுந்தரபாண்டியபுரம் பகுதிகளிலிருந்தும் வாழைத்தார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

விற்பனைக்கு வரும் வாழைத்தார்களை கேரள மொத்த வியாபாரிகள் போட்டி போட்டு ஏலத்திற்கு எடுத்து திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, கோழிக்கோடு உட்பட பல பகுதிகளுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர். இதேபோல் தென்காசி, சுரண்டை, ஆலங்குளம், சேர்ந்தமரம், பாவூர்சத்திரம், கீழப்பாவூர், குறும்பலாப்பேரி, கல்லூரணி, அரியப்புரம், ஆவுடையானூர், அடைக்கலப்பட்டணம், செட்டியூர், திப்பணம்பட்டி, நாட்டார்பட்டி உட்பட மாவட்டத்தில் உள்ள மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரிகளும் பாவூர்சத்திரம் மார்க்கெட்டுக்கு வந்து வாழைத்தார்களை கொள்முதல் செய்வர்.

கடந்த சில மாதங்களாக பருவ மழை பொய்த்து போனதால் விளைச்சல் இன்றி மார்க்கெட்டிற்கு குறைந்தளவே வாழைத்தார்கள் விற்பனைக்கு வருகின்றன. தினசரி விற்பனைக்கு 1500 முதல் 2000 வாழைத்தார்கள் வரும். ஆனால் தற்போது தினசரி 400 முதல் 600 வாழைத்தார்கள் மட்டுமே விற்பனைக்கு வருகின்றன. வரத்து குறைவு மற்றும் ஓணம் பண்டிகையையொட்டி வாழைத்தார்களை கொள்முதல் செய்ய கேரள வியாபாரிகள் அதிகளவில் வருவதால் விலையில் ஏற்றம் காணப்பட்டுள்ளது.

வழக்கமாக ரூ.200 விற்ற நாட்டு வாழைத்தார் ரூ.600க்கும், கோழிக்கோடு ரூ.200லிருந்து ரூ.400க்கும், கதலி ரூ.100லிருந்து 300க்கும், கற்பூரவல்லி ரூ.300லிருந்து 600க்கும், சக்கை வாழை கிலோ ஒன்றுக்கு ரூ.12லிருந்து ரூ.22க்கும், ரோபஸ்டா ரூ.200லிருந்து ரூ.400க்கும், மட்டி பழம் ரூ.200லிருந்து ரூ.500க்கும், செவ்வாழை ரூ.400லிருந்து ரூ.700க்கும் விற்பனையானது.

மேலும் காற்றின் வேகத்தால் வாழை இலைகளும் விளைச்சல் இல்லாததால் குறைவாகவே விற்பனைக்கு வருவதால் 200 எண்ணம் கொண்ட வாழை இலைகள் ரூ.600 முதல் 800 வரை விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

The post பாவூர்சத்திரம் மார்க்கெட்டிற்கு வரத்து குறைந்தது கேரள வியாபாரிகள் குவிவதால் வாழைத்தார் விலை எகிறியது appeared first on Dinakaran.

Tags : Kerala ,Paoorchatram ,Bhavoorchatram ,Kamaraj ,Tenkasi district ,Dinakaran ,
× RELATED மாட்டுப்பட்டி அணையில் பேட்டரி படகு சவாரி: சுற்றுலாப்பயணிகள் ஆர்வம்