×

தேசிய மற்றும் சர்வதேச அளவிலான உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ள 225 அரசு பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

சென்னை: அரசு மாதிரி பள்ளிகள் உள்ளிட்ட அரசு பள்ளிகளில் படித்து மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். தேசிய மற்றும் சர்வதேச அளவிலான உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ள 225 மாணவர்களுக்கு முதல்வர் பாராட்டு தெரிவித்துள்ளார். 225 மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட கல்வி நிலையங்களில் சேர்ந்த அரசுப் பள்ளி மானவர்களுக்கு முதல்வர் பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடக்கும் பாராட்டு விழாவில் முதல்வர் பங்கேற்றுள்ளார்.

தமிழகம் முழுவதும் இருக்க கூடிய அரசு மாதிரி பள்ளிகளில் 12-ம் வகுப்பு படித்து தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் பல்வேறு முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் அரசு பள்ளி மாணவர்கள் நடப்பு கல்வியாண்டில் சேர்ந்துள்ளார்கள் அந்த வகையில் 225 மாணவர்கள் சென்னை ஐஐடி அதே போன்று திருச்சி என்ஐடி மேலும் தேசிய அளவிலான சிறப்பு பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் அரசு பள்ளி மாணவர்கள் சேர்ந்துள்ளார்கள்.

இவர்களுகளுக்கான பாராட்டு விழா பள்ளிக்கல்வித்துறை சார்பில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக நூறாண்டு மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மாணவர்களை பாராட்டி அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் மடிக்கணினிகளையும் வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், மா.சுப்ரமணியன், சேகர்பாபு, சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி உளியிட்டோர் பங்கேற்றுள்ளனர். தமிழகம் முழுவதிலும் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

The post தேசிய மற்றும் சர்வதேச அளவிலான உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ள 225 அரசு பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Chief Minister of State ,National and International Institutes of Higher Education ,G.K. ,Stalin ,Chennai ,Principal ,B.C. ,G.K. Stalin ,
× RELATED கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன்...