×

பேரழிவு கண்ட ஜப்பான்.. ஹிரோஷிமா நாகசாகி 78ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு; இறந்தவர்கள் நினைவாக கண்ணீர் அஞ்சலி..!!

ஜப்பான்: 2ம் உலகப்போரின் போது அணுகுண்டு வீச்சால் ஜப்பான் நாட்டின் நாகசாகி நகரம் பேரழிவை சந்தித்ததன் 78வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 2ம் உலகப்போரின் போது அமெரிக்கா மற்றும் நேச நாடுகளுக்கு எதிராக ஜப்பான் போரிட்டது. மே 8, 1945ல் ஜெர்மனியின் சரணடைதலுடன் ஐரோப்பாவில் போர் முடிவுக்கு வந்தாலும் நேச நாடுகளுக்கும், ஜப்பானுக்கும் இடையே பசுபிக் போர் தொடர்ந்தது. இதனால் இரண்டாம் உலகப்போரில் ஜப்பானை சரணடைய செய்வதற்காக அணுகுண்டுகளை பயன்படுத்த அப்போதைய அமெரிக்க அதிபர் ஹாரி டிருமன் அங்கீகாரம் அளித்தார்.

இதையடுத்து 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி ஹிரோஷிமா நகரில் யுரேனியம் வெடிகுண்டான லிட்டில் பாயும் ” The Fat Man ” என்ற புளூட்டோனியம் குண்டும் வீசப்பட்டது. நாகசாகியில் வீசப்பட்ட புளூட்டோனியம் குண்டு 75 ஆயிரம் பேரின் உயிர்களை பறித்தது. இந்த கொடூர தாக்குதல்கள் 6 நாட்களுக்கு பிறகு ஆகஸ்ட் 15ம் தேதி ஜப்பான் சரணடைந்தது. இரண்டாவது அணுகுண்டு வீச்சால் ஜப்பான் நாட்டின் நாகசாகி நகரம் பேரழிவை எதிர்கொண்ட 78வது ஆண்டு நினைவு தினம் இன்று ஜப்பானில் அனுசரிக்கப்படுகிறது.

The post பேரழிவு கண்ட ஜப்பான்.. ஹிரோஷிமா நாகசாகி 78ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு; இறந்தவர்கள் நினைவாக கண்ணீர் அஞ்சலி..!! appeared first on Dinakaran.

Tags : Japan ,Hiroshima Nagasaki ,Nagasaki ,World War II ,
× RELATED ஜப்பானில் வினோத திருவிழா… குழந்தைகளை...