×

18 கவுன்சிலர்களின் பகுதிகளில் ₹90 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்: ஒன்றியக்குழு தலைவர் நிதி ஒதுக்கீடு

திருவள்ளூர், ஆக. 9: ஒன்றிய கவுன்சிலர்கள் பகுதிகளில் வளர்ச்சி பணிகள் நிறைவேற்ற ₹90 லட்சம் ஒதுக்கப்பட்டது. திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள மன்றக் கூடத்தில் நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் ஜெ.ஜெயசீலி ஜெயபாலன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணைத் தலைவர் பர்கத்துல்லா கான், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணசேகரன், ஜெ.மாணிக்கம், மேலாளர் (நிர்வாகம்) விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் எத்திராஜ், வேலு, சங்கீதா ராஜி, விமலா குமார், சரத்பாபு, பூவண்ணன், சாந்தி தரணி, வேதவல்லி சதீஷ்குமார், ஷகிலா ரகுபதி, பொற்கொடி சேகர், திலீப்ராஜ், நவமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், 15வது நிதி குழு மானியத்தின் மூலம் 2021-22, 2022-23 ஆகிய வருடங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்டு நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டது. மேலும், ஒன்றியத்தில் உள்ள 18 ஒன்றிய கவுன்சிலர்களின் பகுதிகளிலும் சாலை, குடிநீர் வசதி உள்பட வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்ற தலா ₹5 லட்சம் வீதம் மொத்தம் ₹90 லட்சம் நிதிய இணை ஒன்றிய குழுத் தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் ஒதுக்கீடு செய்தார். இதனைத் தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்ததற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

The post 18 கவுன்சிலர்களின் பகுதிகளில் ₹90 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்: ஒன்றியக்குழு தலைவர் நிதி ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : Union Committee ,Tiruvallur ,Tiruvallur Panchayat Union Committee ,Dinakaran ,
× RELATED மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்புகளை...