ஒடுகத்தூர், ஆக.9: ஒடுகத்தூரில் வீட்டின் முன் நிறுத்திய ஆசிரியரின் பைக்கை திருடிய மெக்கானிக்கிற்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் வணிகர் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர்(55), ஒடுகத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் வேதியியல் ஆசிரியராக பணியாற்றுகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை தனது பைக்கை வீட்டின் முன் நிறுத்தி விட்டு வீட்டின் உள்ளே சென்றார். சிறிதுநேரம் கழித்து வந்து பார்த்தபோது பைக் காணவில்லை. இதுகுறித்து வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், வாலிபர் பைக்கை திருடி செல்வது பதிவானது. பின்னர், அப்பகுதிமக்கள் பைக் திருடிய வாலிபரின் வீட்டிற்கு சென்று தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் அரிமலை பகுதியை சேர்ந்த தனுஷ்(20) என்பதும், குருவராஜபாளையத்தில் மெக்கானிக்காக வேலை செய்து வருவதும் தெரிந்தது. இவர், மெக்கானிக்காக வேலை செய்வதோடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் பைக் திருட்டு சம்பவத்திலும் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிந்தது. இதுகுறித்து வழக்குப்பதிந்து தனுஷை கைது செய்த போலீசார் 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
The post ஆசிரியரின் பைக் திருடிய மெககானிக்கிற்கு தர்ம அடி ஒடுகத்தூரில் பரபரப்பு வீட்டின் முன் நிறுத்திய appeared first on Dinakaran.