
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மலேசியா அரசு
- சென்னை
- மாநில செயலாளர்
- பொதுவுடைமைக்கட்சி
- of
- இந்தியா
- K.Balakrishnan
- விநாயகமூர்த்தி
- பட்டுக்கோட்டை
சென்னை, ஆக.9: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பட்டுக்கோட்டையை சேர்ந்த விநாயகமூர்த்தி சேர்டாங் செலங்கூர் பகுதியில் இரும்புக்கடையில் பணியாற்றி வந்தார். அவரை நிறுவனத்தின் உரிமையாளரும், அவரது மகன்களும் பிடித்து வைத்து விநாயகமூர்த்தியின் குடும்பத்தாரிடம் ரூ.10 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பின்னர் விநாயக மூர்த்தியை கொலை செய்து மூட்டையில் கட்டி சாலையில் வீசியுள்ளதாக அவருடைய குடும்பத்தினர் மாவட்ட கலெக்டரிமும், காவல்துறை கண்காணிப்பாளரிடமும் புகார் அளித்துள்ளனர். கொடூரமாக கொல்லப்பட்ட விநாயகமூர்த்தியின் உடலை தமிழ்நாட்டுக்கு எடுத்து வருவதுடன், கொலையில் ஈடுபட்ட கும்பலை கைது செய்து கடுமையாக தண்டிக்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தாருக்கு நிவாரணமாக மலேசிய அரசு ₹1 கோடி வழங்க வலியுறுத்துகிறோம்.
The post தமிழக தொழிலாளி கொலை மலேசிய அரசு ₹1 கோடி வழங்க வேண்டும் appeared first on Dinakaran.