×

வீடு புகுந்து தாக்குதல் தந்தை, மகன்கள் மீது வழக்கு

நித்திரவிளை, ஆக.9: நித்திரவிளை அருகே முள்ளுவிளை என்னுமிடத்தை சார்ந்தவர் தர்ம கிருஷ்ணன் (50). இவரது நிலத்தில் நிற்கும் ரப்பர் மரத்தின் கிளைகள், பால்ராஜ் என்பவரின் நிலத்தின் மேல் படர்ந்து நிற்கிறதாம். இதை வெட்டி அகற்ற தர்ம கிருஷ்ணனிடம், பால்ராஜ் கூறியுள்ளார். தர்ம கிருஷ்ணன் மரக்கிளைகளை வெட்டி அகற்ற வில்லை எனக்கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சம்பவத்தன்று மாலை தர்ம கிருஷ்ணன் வீட்டில் இருக்கும் போது அங்கு வந்த பால்ராஜ், இவரது மகன்கள் விஜயகுமார், மற்றும் ஷைன்குமார் ஆகியோர், தர்ம கிருஷ்ணனை தாக்கி காயப்படுத்தியுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான தர்ம கிருஷ்ணன் வலி தாங்காமல் சத்தம் போடவே அவர்கள் தப்பிச்சென்று விட்டனர். இதில் காயமடைந்த தர்ம கிருஷ்ணன் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது சம்பந்தமாக நித்திரவிளை போலீசார் தகப்பன் மற்றும் மகன்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post வீடு புகுந்து தாக்குதல் தந்தை, மகன்கள் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Dharma Krishnan ,Nitrāpila ,
× RELATED நெல்லை டவுன் பால் வியாபாரி கொலை வழக்கில் இருவர் கைது