- அய்யக்காரன்புளம் மழை மாரியம்மன் கோயில்
- தேர்
- ஆயக்கரான்புளம் மாரியம்மன் கோயில்
- அய்யக்காரன்புளம் மாரியம்மன் கோயில்
வேதாரண்யம்,ஆக.9: ஆயக்காரன்புலம் மழை மாரியம்மன் கோயிலில் மஞ்சள் நீராட்டு, தேரோட்ட விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் ஒன்று, இரண்டாம் சேத்திகளுக்கு பொதுவாக அமைந்துள்ள மழை மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழா கடந்த 23ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தினந்தோறும் மாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகளும், பல்வேறு வாகனங்களில் வீதியுலா காட்சியும் நடைபெற்று வந்தது. இதில் முக்கிய திருவிழாவான சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், தேன், திருநீறு உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்று, வண்ண மலர்களால் சுவாமி அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகளின் வழியாக வீதி உலா வந்து மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்பு இரவு தேரோட்டமும் நடைபெற்றது. இதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர் மனோகரன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சுந்தர்ராஜன், அசோக், பால்ராஜ் உள்ளிட்ட விழா குழுவின் செய்திருந்தனர்.
The post ஆயக்காரன்புலம் மழை மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் appeared first on Dinakaran.