×

240 மதுபாட்டில்கள் பறிமுதல்

 

மதுரை, ஆக.9: மதுரை பொன்மேனி பகுதியில் மதுபாட்டில்கள் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து நேற்று எஸ்எஸ் காலனி போலீசார் பொன்மேனி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது, 240 வெளிமாநில மது பாட்டில்கள் இருந்தது தெரிந்தது. இதன்பேரில் 2 பேரை பிடித்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

The post 240 மதுபாட்டில்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Ponmeni ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி