
- மிஷன் இந்திரதனுஷ் 5.0 தடுப்பூசி முகாம் திறப்பு
- பாலக்காடு
- மிஷன் இந்திரதனுஷ்
- பொது சுகாதார துறை
- ஆலநல்லூர்
- தின மலர்
பாலக்காடு, ஆக.9: பாலக்காடு மாவட்டம், அலநல்லூர் தனியார் அரங்கில் பொது சுகாதாரத்துறை சார்பில் மாவட்ட அளவிலான மிஷன் இந்திரதனுஷ் 5.0 தடுப்பூசி முகாமின் தொடக்க விழா நடைபெற்றது. பிளாக் பஞ்சாயத்துத் தலைவர் ப்ரீதா தொடங்கி வைத்தார். இதில், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் மெகர்பான் தலைமை தாங்கினார். மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் ரீத்தா, மாவட்ட ஆர்சிஎச் அதிகாரி டாக்டர் அனிதா, பிளாக் பஞ்சாயத்து உறுப்பினர்களான பஷீர், ஷானவாஸ், மணிகண்டன், எச்எம்சி உறுப்பினர் ரவி, மகளிர் மற்றும் குழந்தையினர் மேம்பாட்டுத் துறை பிரதிநிதி தீபா, சமூக ஆரோக்கிய மையம் கண்காணிப்பாளர் ராபியா, தகவல் அதிகாரி சந்தோஷ்குமார், சுகாதாரத்துறை ஊழியர்கள், ஆஷா மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், பொதுமக்கள் ஆகியோர் இவ்விழாவில் பங்கேற்றனர்.
The post மிஷன் இந்திரதனுஷ் 5.0 தடுப்பூசி முகாம் துவக்கம் appeared first on Dinakaran.