×

சமத்துவ மக்கள் கட்சியின் 17-ம் ஆண்டு தொடக்கவிழா ஆலோசனை கூட்டம்

 

திருப்பூர், ஆக. 9: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 17-ம் ஆண்டு தொடக்கவிழா அடுத்த மாதம் 10ம் தேதி திருப்பூரில் நடைபெறுகிறது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் திருப்பூர் மாநகர் மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி சார்பில் போயம்பாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். கொங்கு மண்டல செயலாளர் உபயுதுள் ரகுமான், சேலம் மண்டல செயலாளர் மைக்கேல் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கட்சியின் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளர் சுந்தர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி பேசினார். இதில் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜவகர், மாநில கொள்கை பரப்பு செயலாளர் செங்குளம் கணேசன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் ஸ்டீல் ராஜன், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் ராஜா, கிழக்கு மாவட்ட செயலாளர் ரமேஷ், மாவட்ட மாணவரணி செயலாளர் அருண்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளர் சுந்தர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அடுத்த மாதம் 10ம் தேதி கட்சியின் 17-ம் ஆண்டு தொடக்கவிழா நடைபெறுகிறது. இதில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு, வரும் காலங்களில் நடைபெறும் தேர்தல்களை ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் நடத்த வேண்டும். பொதுமக்களுக்கு வழங்கப்படும் இலவசங்களை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அந்த பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post சமத்துவ மக்கள் கட்சியின் 17-ம் ஆண்டு தொடக்கவிழா ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : 17th Annual Inaugural Meeting ,Samatthu People's Party ,Tirupur ,17th Inaugural Ceremony ,All ,India Equality ,People's Party ,
× RELATED திருப்பூர் மண்டல போக்குவரத்து பொது மேலாளர் சஸ்பெண்ட்