×

விபத்தில் வாலிபர் படுகாயம்

 

ஆண்டிபட்டி, ஆக. 9: மதுரை பெத்தானியாபுரத்தை சேர்ந்தவர் அஜித்குமார் (24). இவர் அப்பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர், தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே முத்தனம்பட்டியில் உள்ள தனது சித்தப்பா மகள் அனுப்பிரியாவை பார்ப்பதற்காக டூவீலரில் புறப்பட்டு சென்றார். வழியில் ஆண்டிபட்டி கோர்ட் அருகே சென்றபோது, எதிர்திசையில் வந்த லாரி எதிர்பாராதவிதமாக டூவீலரில் மோதியது. இதில் அஜித்குமார் பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அனுப்பிரியா புகாரில், லாரி டிரைவர் ஜெயசீலனிடம் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

The post விபத்தில் வாலிபர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Antipatti ,Ajith Kumar ,Bethaniapuram, Madurai ,Dinakaran ,
× RELATED சட்டம் சார் தன்னார்வலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்