×

நாடாளுமன்ற துளிகள்

*1532 வீரர்கள் தற்கொலை
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் எழுத்து மூலமாக அளித்த பதிலில்,‘‘கடந்த 2011ம் ஆண்டு முதல் மத்திய ஆயுத படைப்பிரிவு, அசாம் ரைபிள்ஸ் மற்றும் தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த1,532 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர், ஆபத்து காரணிகளை கண்டறிவதற்காக பணி குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்கொலைகளை தடுப்பதற்கான தீர்வுநடவடிக்கைகளை பரிந்துரைக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

* ஊடுருவ முயன்ற 2 வீரர்கள், 21 பேர் கைது
மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நிசித் பிரமானிக் எழுத்து மூலமாக அளித்த பதிலில், ‘‘கடந்த 2021ம் ஆண்டு முதல் இந்திய-பாகிஸ்தான் எல்லை, இந்தோ-வங்கதேச எல்லைகள் உள்ளிட்டவற்றில் ஊடுருவ முயற்சிகளில் ஈடுபட்ட 2 எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் பொதுமக்கள் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் இத்தகைய ஈடுபாடு கவனிக்கப்படுபோதெல்லாம் முறையான விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

* 6500 கருத்து அடிப்படையில் நெக்ஸ்ட் விதிமுறைகள்
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஒன்றி சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ‘‘தேசிய மருத்துவ ஆணையம் ஜூன் 27ம் தேதி நெக்ஸ்ட் தேர்வுக்கான விதிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகள் சுமார் 6500 கருத்துக்களின் அடிப்படையில் விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் உட்பட மாணவர்கள் எழுப்பிய அச்சத்தின் அடிப்படையில் ஜூலை 13ம் தேதியிட்ட பொது அறிவிப்பின்படி நெக்ஸ்ட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது” என்றார்.

* கிரெடிட் கார்டு நிலுவை தொகை ரூ.2.10லட்சம் கோடியாக அதிகரிப்பு
மாநிலங்களவையில் ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பக்வத் காரத் எழுத்து மூலமாக அளித்த பதிலில்,‘‘ரிசர்வ் வங்கியின் அளித்த விவரங்களின்படி கிரெடிட் கார்டு வாராக்கடனானது 2022ம் ஆண்டு மார்ச்சில் ரூ.3122 கோடியாக இருந்தது. இது இந்த ஆண்டு மார்ச்சில் ரூ.4072 கோடியாக ஆக அதிகரித்துள்ளது. கிரெடிட் கார்ட் நிலுவை தொகையானது கடந்த ஆண்டு மார்ச்சில் 1.64லட்சம் கோடியாகவும் இந்த ஆண்டு ரூ.2.10லட்சம் கோடியாகவும் உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post நாடாளுமன்ற துளிகள் appeared first on Dinakaran.

Tags : Parliament ,Union ,Home Minister ,Nithyananda Roy ,Lok Sabha ,
× RELATED அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியதால் பரபரப்பு..!!