×

உதவி நிலவியலாளர் பணி தேர்வு இணையதளத்தில் ஹால்டிக்கெட்: டிஎன்பிஎஸ்சி தகவல்

சென்னை: உதவி நிலவியலாளர் பணி தேர்வுக்கான ஹால்டிக்கெட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்ட அறிவிப்பு: ஒருங்கிணைந்த உதவி நிலவியலாளர் சார்நிலை பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான எழுத்து தேர்வு (கணினி வழித்தேர்வு) வருகிற 18ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலில் 4 மாவட்ட தேர்வு மையங்களில் மட்டும் நடைபெற உள்ளது. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டினை (ஹால்டிக்கெட்) தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post உதவி நிலவியலாளர் பணி தேர்வு இணையதளத்தில் ஹால்டிக்கெட்: டிஎன்பிஎஸ்சி தகவல் appeared first on Dinakaran.

Tags : DNBSC ,Chennai ,Halticket ,Tamil Nadu Government Personnel Examination Nadu ,
× RELATED ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப்...