
சென்னை: மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரி டெல்டா மாவட்டங்களில், குறுவை சாகுபடியை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு குறுவை திட்டத்தை அறிவித்தது. இம்முறை டெல்டா மாவட்டங்களில் மட்டும் 5 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், சில பகுதிகளில் போதிய அளவு தண்ணீர் வராததால் சாகுபடி செய்த நெற்பயிர்கள் காய்ந்து கருகும் நிலை உருவாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு இதுவரை 11.6 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வந்துள்ளது. கர்நாடகாவில், 4 முக்கிய நீர்த்தேக்கங்களின் முழு கொள்ளளவான 114.6 டி.எம்.சியில், 91 டி.எம்.சி அளவிற்கு மொத்த நீர் இருப்பு உள்ள நிலையிலும், கர்நாடக அரசு 28.8 டி.எம்.சி அளவிற்கு தண்ணீர் திறந்து விட கடைமடை பகுதிகளில் தண்ணீர் செல்லாமல் பயிர்கள் கருகியுள்ளன. குறுவை பயிர்கள் கருகி வரும் அவசர சூழலில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உடனடியாக தலையிட வேண்டும். எனவே, தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய தண்ணீரை முழுமையாக திறந்து விட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் 14ம்தேதி டெல்டா மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
The post காவிரிநீரை திறக்கக்கோரி 14ல் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.