×

நீர்வளத்துறை பொறியாளர்களுக்கு ஜிபிஎஸ் கருவிகள்

சென்னை: நீர்வளத்துறை திட்ட உருவாக்கப் பொறியாளர்களுக்கு வழங்கிடும் வகையில், 9 டிஜிட்டல் ஜிபிஎஸ் கருவிகள் மற்றும் 214 கையடக்க ஜிபிஎஸ் கருவிகள் ஆகியவை எல்காட் மூலம் ரூ.5.11 கோடி செலவில் கொள்முதல் செய்யப்பட்டன. இந்த டிஜிபிஎஸ் மற்றும் கையடக்க ஜிபிஎஸ் நவீன கருவிகள் செயற்கைக்கோள் தொடர்புடன் இயக்கப்படுகிறது. டிஜிபிஎஸ் கருவிகள் செயற்கைக்கோள்களிலிருந்து சமிக்ஞைகளைப் பெற்று அதன்மூலம் இருப்பிடத்தை துல்லியமாக அளப்பதால், நீர்பாசன திட்டங்களான தடுப்பணைகள், ஏரிகள், நீர்தேக்கங்கள், கால்வாய்கள் போன்ற அமைப்புகளை அமைத்திட துல்லியமான நிலஅளவைகள் போன்ற ஆய்வு பணிகளை புவியியல் தகவல் அமைப்புடன் இணைந்து மேற்கொள்ளலாம். சென்னை தலைமை செயலகத்தில் நேற்று, இந்த கருவிகளை நீர்வளத்துறை பொறியாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

The post நீர்வளத்துறை பொறியாளர்களுக்கு ஜிபிஎஸ் கருவிகள் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED சென்னையில் குற்றச் சம்பவங்களில்...