×

யானைகள் கணக்கெடுப்பு அறிக்கை வெளியீடு: 2017ல் 2761; இப்போது 2961

சென்னை: சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் ‘ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு 2023’ அறிக்கையினை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். சென்னை, தலைமைச்செயலகத்தில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் ‘ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு 2023’’ அறிக்கையினை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தமிழ்நாடு வனத்துறை அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடகா அரசுகளின் ஒத்துழைப்புடன், ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பினை கடந்த மே மாதம் 17ம் தேதி முதல் மே மாதம் 19ம் தேதி வரை நடத்தியது.

அதேபோல, ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கையின்படி, 2017ம் ஆண்டு 2761 ஆக இருந்த யானைகளின் எண்ணிக்கை, தற்போது 2961 ஆக அதிகரித்துள்ளது. இந்த ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பில் மொத்தம் 2099 பேர் இக்கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதேபோல, டேராடூனில் உள்ள இந்திய வன விலங்குகள் நிறுவனம், மயிலாடுதுறை ஏ.எம்.சி கல்லூரி மற்றும் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்டது. மேலும், தமிழ்நாடு அரசு மேற்கொண்ட யானைகள் பாதுகாப்பு இயக்கத்தின் மூலமாக மேற்கொண்ட நடவடிக்கைகள் வாயிலாக யானைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அகத்திய மலை யானைகள் காப்பகம், தமிழ்நாடு யானைகள் பாதுகாப்பு இயக்கம், யானைகள் வாழிடங்களை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளும் இதற்கு காரணமாக விளங்கின என்பது குறிப்பிடத்தக்கது.

* நீலகிரியில் யானைகள் அதிகம்
நீலகிரி கிழக்கு தொடர்ச்சிமலை யானைகள் காப்பகத்தில் 2477 யானைகள் உள்ளது. கிழக்கு தொடர்ச்சி மலைகளில் 1105 யானைகளும், மேற்கு தொடர்ச்சி மலைகளில் 1855 யானைகளும் உள்ளன.

* புலிகள் காப்பகத்தில் யானைகளின் எண்ணிக்கை
காப்பக பெயர் வனக்கோட்டம் பதிவு மொத்தம்
முதுமலை உதகை 444 790
முதுமலை மசினகுடி 346
சத்தியமங்கலம் சத்தியமங்கலம் 396 668
சத்தியமங்கலம் ஆசனூர் 272
ஆனைமலை திருப்பூர் 211 211

The post யானைகள் கணக்கெடுப்பு அறிக்கை வெளியீடு: 2017ல் 2761; இப்போது 2961 appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin ,Environment Climate Change and ,Forest Department… ,Dinakaran ,
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...