×

வரதட்சணை கொடுமை வழக்கில் 12 ஆண்டுகளாக தலைமறைவான குற்றவாளி சென்னையில் கைது

மீனம்பாக்கம்: ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் பாலமுரளி கிருஷ்ணா நரஹரி ஷெட்டி (48). இவர் மீது கடந்த 2011ம் ஆண்டு விஜயவாடா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், வரதட்சணை கொடுமை வழக்கு பதிவாகியது.

அவரை கைது செய்ய போலீசார் தேடினர். தலைமறைவானார். அவரை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக மாநகர போலீஸ் கமிஷனர் அறிவித்தார். அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் தெரியப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று, எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவிலிருந்து, எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் ஆவணங்களை அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பினர். இந்த விமானத்தில் பாலமுரளி கிருஷ்ணா நரஹரி ஷெட்டியும் வந்தார்.

அவரது பாஸ்போர்ட் ஆவணங்களை பரிசோதித்த போது, ஆந்திரா போலீசாரால், கடந்த 12 ஆண்டுகளாக தேடப்படும் குற்றவாளி என தெரியவந்தது. அவரை குடியுரிமை அலுவலகத்தில் அடைத்து வைத்தனர்.

அதோடு விஜயவாடா மாநகர போலீஸ் கமிஷனருக்கு தெரியப்படுத்தினர். இதையடுத்து தனிப்படை போலீசார், இன்று அதிகாலை சென்னை விமான நிலையத்துக்கு வந்து பாலமுரளி கிருஷ்ணா நரஹரி ஷெட்டியை கைது செய்து அழைத்து சென்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

The post வரதட்சணை கொடுமை வழக்கில் 12 ஆண்டுகளாக தலைமறைவான குற்றவாளி சென்னையில் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Balamurali Krishna Narahari Shetty ,Vijayawada ,Andhra Pradesh ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்...