×

தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளில் 1,649 கோயில் சிலைகள் மீட்பு: இதுவரை 364 சிலைகள் ஒப்படைப்பு… அடையாளம் காணாத சிலைகள் ஒப்படைக்க கோரிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் மீட்கப்பட்ட சிலைகளில் 1000-க்கும் மேற்பட்டவைகளுக்கு இன்னும் எந்த கோயில் நிர்வாகமும் உரிமை கோராததால் அரசிடமே உள்ளன. அவற்றை விரைந்து உரிய கோயில்களில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ்நாட்டின் பழமையான சிலைகள், சிற்பங்கள், ஓவியங்கள், கலைப்பொருட்கள் ஆகியன பல்வேறு காலகட்டங்களில் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு பலரது கைமாறி பின் அங்குள்ள அருங்காட்சியகங்கள், பல்கலைக்கழகங்கள், கலை ஆர்வலர்களின் மாளிகைகளில் காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் 1992-ம் ஆண்டு முதல் தற்போது வரை 400 கோயில்களில் இருந்து 1,300-க்கும் அதிகமான சிலைகள் திருடு போனதும், அதற்கு பதிலாக போலி சிலைகள் வைக்கப்பட்டதும் ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டன. இந்நிலையில், கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து இதுவரை வெளிநாடுகளில் இருந்து 1,694 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றில் வெறும் 364 சிலைகள் கோயில்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மற்றவை எந்த கோயில்களுக்கு சொந்தமானவை என கண்டுபிடிக்கப்படாமல் உள்ளன. அவற்றை விரைந்து உரிய கோயில்களில் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில் அடையாளம் காணப்படாத சிலைகளின் படங்களை முப்பரிமாண வடிவில் கடத்தல் தடுப்பு பிரிவு வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், சிலைகளை அடையாளம் காண உதவுபவர்களுக்கு சன்மானம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஏ.டி.ஜி.பி. சைலேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக மேற்கொண்ட முயற்சியின் பயனாக கடந்த 6 மாதத்தில் 94 சிலைகள் மீட்கப்பட்டு இருப்பதாகவும், இந்த கடத்தல் தொடர்பாக 16 வழக்குகளில் 66 குற்றவாளிகளுக்கு தண்டனையும் பெற்று தரப்பட்டுள்ளதாகவும் சைலேஷ் குமார் தெரிவித்துள்ளார். மீட்கப்பட்டு ஒப்படைக்கப்படாமல் உள்ள சிலைகள் தங்கள் கோயிலுக்கு சொந்தமானது என கருதும் அக்கோயில் நிர்வாகிகள் உரிய ஆதாரங்களுடன் உரிமை கோர முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

The post தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளில் 1,649 கோயில் சிலைகள் மீட்பு: இதுவரை 364 சிலைகள் ஒப்படைப்பு… அடையாளம் காணாத சிலைகள் ஒப்படைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CHENNAI ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...