×

2 போர் கப்பல்கள் மூலம் 3,000 வீரர்கள் செங்கடல் பகுதியில் குவிப்பு: ஈரானின் அச்சுறுத்தலால் அமெரிக்கா உஷார்

வாஷிங்டன்: அமெரிக்காவின் இரண்டு போர் கப்பல்கள் மூலம் 3,000 வீரர்கள் செங்கடல் பகுதியில் குவிக்கப்பட்டதால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மேற்காசிய நாடான ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே, டெஹ்ரான் அணுசக்தித் திட்டம் தொடர்பாக நீண்ட காலமாக பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க கடற்படை வெளியிட்ட அறிவிப்பில், ‘இரண்டு போர்க்கப்பல்களில் 3,000க்கும் மேற்பட்ட மாலுமிகள், கடற்படை வீரர்கள் கொண்ட குழு, சூயஸ் கால்வாய் வழியாக மத்திய கிழக்கில் அமைந்துள்ள செங்கடல் பகுதிக்குள் நுழைந்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரான் மூலம் அச்சுறுத்தல்கள் இருப்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பஹ்ரைனை தளமாகக் கொண்டு, அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படை ெசயல்பட்டு வருகிறது. இந்த பகுதியானது ஓமன், செங்கடல், இந்தியப் பெருங்கடலின் சில பகுதிகள், ஹார்முஸ் ஜலசந்தி, சூயஸ் கால்வாய் மற்றும் மூன்று சோக் பாயிண்ட்கள், பாப் அல்-மண்டேப் ஜலசந்தி உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியது ஆகும்’ என்று தெரிவித்துள்ளது.
ஈரான் உடனான பதற்றங்களுக்கு மத்தியில் 3,000க்கும் மேற்பட்ட அமெரிக்க துருப்புக்கள் மத்திய கிழக்கு பகுதியில் முகாமிட்டுள்ளதால் பதற்றம் நிலவி வருகிறது.

The post 2 போர் கப்பல்கள் மூலம் 3,000 வீரர்கள் செங்கடல் பகுதியில் குவிப்பு: ஈரானின் அச்சுறுத்தலால் அமெரிக்கா உஷார் appeared first on Dinakaran.

Tags : Red Sea ,US ,Iran ,Washington ,America ,Dinakaran ,
× RELATED இந்தியா நோக்கி வந்த ரஷ்ய எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்