×

நண்டு ரசம்

தேவையான பொருட்கள்

நண்டு – ஒரு கிலோ
தக்காளி – 3
கறிவேப்பிலை – சிறிது
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
உளுந்தம்பருப்பு – 2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்
சோம்பு – கால் டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
புளிக்கரைசல் – கால் கப்
தண்ணீர் – 4 கப்
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு.

செய்முறை

முதலில் எடுத்து வைத்திருக்கிற தக்காளியை அரைத்துக் கொள்ளவும். பின்பு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் சுத்தம் செய்த நண்டுடன் உப்பு, மஞ்சள்தூள் மற்றும் 4 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். அடிகனமான மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, சோம்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். அடுத்து நண்டு ரசத்திற்கென்று தனியாக தயார்செய்த ரசப்பொடியைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். அடுத்து அரைத்த தக்காளி விழுதைச் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்கவும். பிறகு புளிக்கரைசலை ஊற்றி கொதிக்க விடவும். பிறகு வேகவைத்த நண்டு மற்றும் அதன் தண்ணீர் சேர்த்துக் கலக்கி இறக்கினால் நண்டு ரசம் தயார்.

 

The post நண்டு ரசம் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...