×

ஓசூர் அருகே பட்டாசு குடோனை ஆய்வு செய்ய வந்த அதிகாரிகள் பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறியதால் படுகாயம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஓசூர் அருகே பட்டாசு குடோனை ஆய்வு செய்ய வந்த அதிகாரிகள் படுகாயம் அடைந்துள்ளனர். ஆய்வு செய்து கொண்டிருந்த போது பட்டாசு வெடித்து 3 அதிகாரிகள் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஜே.காரப்பள்ளி கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் ஆதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது குடோனில் இருந்த பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஓசூர் நிலவிரித் சிறப்பு திட்ட டிஆர்ஓ பாலாஜி மற்றும் நிலவிரித் சிறப்பு திட்ட தாசில்தார் முத்துப்பாண்டி, தேன்கனிக்கோட்டை தாசில்தார் சரவணகுமார், குடோன் மேனேஜர் ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்த அதிகாரிகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஓசூர் அருகே ஜே.காரப்பள்ளி கிராமத்தில் இந்த வெடி விபத்து நடந்துள்ளது. கடந்த 29ம் தேதி கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் உள்ள பட்டாசு கடையில் வெடிவிபத்து ஏற்பட்டது இதில் 9 பேர் உயிரிழந்தனர். அச்சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் ஏழு சிறப்பு குழுக்களை அமைத்து மாவட்டம் முழுவதும் பட்டாசு கடைகள் குடோன்கள் உள்ளிட்ட கிடங்கில் ஆய்வு செய்ய உத்தரவிட்டது.

அந்த உத்தரவின் படி நிலவிரித் சிறப்பு திட்ட டிஆர்ஓ பாலாஜி தலைமையில் ஓசூர் அருகே ஜே.காரப்பள்ளி கிராமத்தில் இயங்க கூடிய தனியார் குடோனில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். திடீரென எதிர்பாராத விதமாக குடோனில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. ஓசூர் நிலவிரித் சிறப்பு திட்ட டிஆர்ஓ பாலாஜி மற்றும் நிலவிரித் சிறப்பு திட்ட தாசில்தார் முத்துப்பாண்டி, தேன்கனிக்கோட்டை தாசில்தார் சரவணகுமார், குடோன் மேனேஜர் ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர். கடையின் மேனேஜர்க்கு 80 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. சிறப்பு திட்ட டிஆர்ஓக்கு 20 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. தாசில்தார் முத்துப்பாண்டிக்கு வலதுகையில் காயம் ஏற்பட்டுள்ளது. படுகாயம் அடைந்த அதிகாரிகளை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நிலவிரித் சிறப்பு திட்ட டிஆர்ஓ பாலாஜி மேல் சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பட்டாசு வெடி விபத்து நடைபெற்ற இடத்தில் மாவட்ட ஆட்சியர் சரயு, மாவட்ட கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாக்கூர் உள்ளிட்ட அதிகாரிகள் படுகாயம் அடைந்த அதிகாரிகளை பார்வையிட்டு அவர்களின் நிலைமையை கேட்டறிந்தனர். பட்டாசு குடோனில் வெடி விபத்து நடைபெற்றது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post ஓசூர் அருகே பட்டாசு குடோனை ஆய்வு செய்ய வந்த அதிகாரிகள் பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறியதால் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Kudon ,Osur ,Krishnagiri Osur ,Gudon ,Dinakaran ,
× RELATED விருதுநகர் வெடி விபத்தில் 4 பேர்...