×

திருவாரூர் மாவட்டம் பெருவிடைமருதூரில் குருவை பாசனத்திற்காக ஆற்று நீரை பகிர்வதில் விவசாயிகளிடையே மோதல்..!!

திருவாரூர்: குருவை பாசனத்திற்காக ஆற்றிலிருந்து தண்ணீர் பாய்ச்சுவதில் இரு விவசாயிகளிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் பல இடங்களில் குருவை சாகுபதிக்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

மாவட்டம் முழுவதும் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குருவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தாலுக்கா பெருவிடைமருதூர் பகுதியில் கணேசன் என்பவருக்கும் வேங்கடலாசம் என்பவருக்கும் நிலம் உள்ளது. நீரை பகிர்வதில் விவசாயிகளிடத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் கலைந்து சென்றனர்.

அதன் பிறகு உரக்கடையில் வைத்து விவசாயிகள் கணேசன், வெங்கடாசலம் என்பவரின் மகன் ஐயப்பனுக்கு இடையில் கடும் வாக்குவாதம் முற்றி கணேசனை அரிவாளால் ஐயப்பன் வெட்டியுள்ளார். இந்நிலையில் காயமடைந்த கணேசனை அருகில் இருந்தவர்கள் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இது குறித்து திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஐயப்பன் தலைமறைவாகியுள்ளார். அவரை காவல்துறையினர் தேடிவருகின்றனர். இந்நிலையில் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

The post திருவாரூர் மாவட்டம் பெருவிடைமருதூரில் குருவை பாசனத்திற்காக ஆற்று நீரை பகிர்வதில் விவசாயிகளிடையே மோதல்..!! appeared first on Dinakaran.

Tags : Guruvai ,Peruvidaimarudur ,Tiruvarur district ,Tiruvarur ,Tiruvarur… ,Peruvidaimarudur, ,
× RELATED பள்ளிகள் திறப்பதற்கு முன்ேப வரும்...