×

கம்பம் சுற்றுவட்டார பகுதியில் விளைச்சல் குறைவால் பன்னீர் திராட்சை விலை கிடுகிடுவென உயர்வு

கம்பம் : கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் விளையக்கூடிய பன்னீர் திராட்சையின் விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ 70 க்கு விற்பனை செய்யப்படுகிறது.கம்பம் பகுதியில் சுருளிப்பட்டி, ஏண்டிபட்டி, கேகே.பட்டி, ராயப்பன்பட்டி மற்றும் கூடலூர் ஆகிய பகுதிகளில் பன்னீர் திராட்சை விவசாயம் செய்யப்படுகிறது. இந்த வருடம் தென்மேற்கு பருவமழை பொய்த்துப் போனதால் அனைத்து வகையான காய்கறிகளின் விளையும் அதிகபட்ச விலைக்கு விற்கப்படுகிறது.இந்நிலையில் போதிய விளைச்சல் இல்லாததால் பன்னீர் திராட்சை ஒரு கிலோ ரூ.70 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த வருடம் இதே ஆகஸ்ட் மாதம் ரூ.40க்கு பன்னீர் திராட்சை விற்பனை செய்யப்பட்டது. இந்த வருடம் விளைச்சல் இல்லாததால் பன்னீர் திராட்சையின் விலை உயர்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் விவசாயிகளிடமிருந்து ரூ.70க்கு கொள்முதல் செய்யும் வியாபாரிகள் சில்லறை விலையில் ரூ.100 முதல் 120 வரை விற்பனை செய்கிறார்கள்.மேலும் ஒரு ஏக்கருக்கு 5 டன் வரை விளையக்கூடிய பன்னீர் திராட்சை, தற்போது சுமார் 2 டன் மட்டுமே விளைந்துள்ளதாகவும், பருவம் தவறி பெய்த மழையினாலும், தற்போது பெய்ய வேண்டிய மழை பெய்யாததாலும் பன்னீர் திராட்சை விலை அதிகரித்துள்ளதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.

The post கம்பம் சுற்றுவட்டார பகுதியில் விளைச்சல் குறைவால் பன்னீர் திராட்சை விலை கிடுகிடுவென உயர்வு appeared first on Dinakaran.

Tags : Kambam ,Kampam ,Kampam valley ,
× RELATED விபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி...