×

பிதர்காடு பஜாரில் குப்பை மூட்டைகளுடன் பொதுமக்கள் சாலையில் இறங்கி போராட்டம்

பந்தலூர் : பந்தலூர் அருகே பிதர்காடு பஜாரில் குப்பைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம், நெலாக்கோட்டை ஊராட்சியில் உள்ள பிதர்காடு, பாட்டவயல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

பொதுமக்கள் பல முறை குப்பைகளை அகற்ற வலியுறுத்தியும், அகற்றப்படாததால் நேற்று பிதர்காடு பஜாரில் குப்பை மூட்டைகளை சாலையில் வைத்து முற்றுகையிட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இது பிதர்காடு பஜாரில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் கூறுகையில், ‘‘ஊராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகளை கொட்டுவதற்கு போதிய இடம் இல்லாததால் இதுபோன்ற பிரச்னை ஏற்படுகின்றது. பிதர்காடு பஜார் பகுதியில் ஏற்பட்ட பிரச்னைக்கு பின் உடனடியாக குப்பைகள் அகற்றப்பட்டது’’ என்றார்.

The post பிதர்காடு பஜாரில் குப்பை மூட்டைகளுடன் பொதுமக்கள் சாலையில் இறங்கி போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Bidargad bazaar ,Bandalur ,Nilgiris ,
× RELATED நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் உலா வாகன ஓட்டிகள் பீதி