×

மாநிலங்களவையில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் இடைநீக்கம்

டெல்லி: மாநிலங்களவையில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் இடை நீக்கம் செய்யப்பட்டார். நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து மணிப்பூர் மற்றும் டெல்லி அதிகாரிகள் நியமன மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கியது. இந்நிலையில் நாடாளுமன்றத்தின் இன்றைய அவை நிகழ்வுகள் காலை 11 மணிக்கு தொடங்கின. அப்போது அவை நடவடிக்கையை சீர்குலைத்ததற்காகவும், அவைத் தலைவரின் உத்தரவை மதிக்காமல் தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக திரிணமூல் எம்பி டெரெக் ஓ பிரைனை இடைநீக்கம் செய்ய ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் மாநிலங்களவையில் தீர்மானம் கொண்டு வந்தார்.

தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதால் டெரிக் ஓ பிரையனை சஸ்பெண்ட் செய்து அவைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். கூட்டத்தொடரில் உள்ள எஞ்சிய நாட்கள் முழுவதும் டெரிக் ஓ பிரையன் இடைநீக்கம் செய்யப்பட்டார். இதனிடையே மக்களவை தொடங்கிய 2 நிமிடங்களுக்குள், எதிர்க்கட்சிகளின் முழக்கத்தால், பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் 12 மணிக்கு தொடங்கவுள்ளது. கேள்வி நேரத்தை ஒத்தி வைத்துவிட்டு, நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தை தொடங்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

The post மாநிலங்களவையில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் இடைநீக்கம் appeared first on Dinakaran.

Tags : Trinamool Congress ,Rajya Sabha ,Derrick O'Brien ,Delhi ,Dinakaran ,
× RELATED பெறும் வாக்குகளுக்கு இணையாக மரம் நடுவேன்: நடிகரின் வித்தியாச வாக்குறுதி