×

செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் தமிழ்நாடு டிஜிபி, உள்துறை செயலர் நேரில் ஆஜராக நேரிடும்: உச்சநீதிமன்றம்

டெல்லி: செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் தமிழ்நாடு டிஜிபி, உள்துறை செயலர் நேரில் ஆஜராக நேரிடும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பண மோசடி புகாரை முடிக்க 6 மாதம் அவகாசம் கோரிய சென்னை மத்திய குற்றப்புலனாய்வு வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், அசாதுதீன் அமனுல்லா அடங்கி அமர்வில் வழக்கு விசாரணை செய்யப்பட்டது. எவ்வளவு காலம் அவகாசம் வேண்டும் என்பதை நேரில் வந்து டிஜிபி கேட்கட்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
விசாரணையை முடிக்க 6 மாதம் அவகாசம் வேண்டும் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

The post செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் தமிழ்நாடு டிஜிபி, உள்துறை செயலர் நேரில் ஆஜராக நேரிடும்: உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Senthil Balaji ,Tamil Nadu ,DGB ,Supreme Court ,Delhi ,Tamil ,Nadu ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கை மே 6-ம்...