×

அண்ணாமலையின் பாதயாத்திரையையொட்டி விருதுநகர் பாஜக அலுவலகத்தல் வைக்கப்பட்ட பாரத மாதா சிலை இரவோடு இரவாக அகற்றம்!!

விருதுநகர்: அண்ணாமலையின் பாதயாத்திரையையொட்டி விருதுநகர் பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்ட பாரத மாதா சிலையை வருவாய்த்துறையினர் இரவோடு இரவாக அகற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த மாதம் 28 ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ‛என் மண்.. என் மக்கள்’ என்ற பெயரிலான பாதயாத்திரையை தொடங்கினார். இந்த நடைப்பயணம் என்பது ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரையில் நடந்து முடிந்துள்ளது. அடுத்ததாக விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விருதுநகர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் விருதுநகர் நான்கு வழிச்சாலையில் பாஜ கிழக்கு மாவட்ட அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று அனுமதியின்றி பாரத மாதா சிலை அமைக்கப்பட்டது. தகவலறிந்த வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் கட்சி அலுவலகத்திற்கு வந்தனர். அனுமதியின்றி சிலை வைக்கப்பட்டுள்ளதாக கூறிய அதிகாரிகள், அதனை அகற்றுமாறு கட்சி நிர்வாகிகளிடம் கூறினர். ஆனால் அகற்ற மறுத்த பாஜவினர், அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அலுவலகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் ஏடிஎஸ்பி அசோகன், டிஎஸ்பி பவித்ரா, வட்டாட்சியர் பாஸ்கரன் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்படாததால் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இருப்பினும் அதிகாரிகள் விடவில்லை. முதலில் பாரத மாதா சிலையின் மீது துணி சுற்றி வருவாய்த்துறை அதிகாரிகள் மறைத்தனர். அதன்பிறகு அந்த சிலையை வருவாய்த்துறையினர் அகற்றி அங்கிருந்து எடுத்து சென்றனர். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இரவோடு இரவாக இந்த சம்பவம் நடந்தது விருதுநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post அண்ணாமலையின் பாதயாத்திரையையொட்டி விருதுநகர் பாஜக அலுவலகத்தல் வைக்கப்பட்ட பாரத மாதா சிலை இரவோடு இரவாக அகற்றம்!! appeared first on Dinakaran.

Tags : vrudunagar bajaga ,Virudunagar ,Bharata ,Mata ,Vrudunagar ,Bharata Mata ,Virudunagar Bajaka ,
× RELATED இந்திய நடன கலைஞர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை