×

தாராபுரத்தில் குழந்தை தொழிலாளர்கள் 2 பேர் மீட்பு

 

திருப்பூர்,ஆக.8:அவிநாசியை சேர்ந்த விழுதுகள் தன்னார்வ அமைப்புக்கு, தாராபுரம் அருகே திருமலைபாளையத்தில் உள்ள செங்கல் சூளையில் குழந்தை தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக புகார் வந்தன. இதுதொடர்பாக அவிநாசி விழுதுகள் தன்னார்வ அமைப்பின் இயக்குநர் தங்கவேல் மற்றும் தாராபுரம் போலீஸார் கள ஆய்வில் ஈடுபட்டனர். இதையடுத்து விழுப்புரத்தை சேர்ந்த சகோதரர்களுக்காக சூளையில் வேலை செய்வது தெரியவந்தது.

தாராபுரம் கோட்டாட்சியர் உத்தரவுப்படி, சிறுவர்கள் இருவரும் மீட்கப்பட்டனர். தொடர்ந்து அவர்களை திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழு முன்பு ஆஜர்படுத்தி, அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் பணியில் தன்னார்வ அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். கொரோனா தொற்றுக்கு பிறகு அந்த சிறுவர்கள் பள்ளிக்கு செல்லாமல் இருந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்துக்கு குழந்தை தொழிலாளர்களாக வேலைக்கு வந்தது வருவாய்த்துறை விசாரணையில் தெரிய வந்தது.

The post தாராபுரத்தில் குழந்தை தொழிலாளர்கள் 2 பேர் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Tarapuram ,Tirupur ,Tirumalaipalayam ,Avinasi ,Dinakaran ,
× RELATED ஆவணங்களின்றி இயக்கிய 23 வாகனங்களுக்கு அபராதம்