×

பரமக்குடி பகுதியில் கலைஞர் படத்திற்கு மலர்தூவி மரியாதை

பரமக்குடி, ஆக.8: கலைஞரின் 5ம் ஆண்டு நினைவு நாளையொட்டி பரமக்குடியில் உள்ள எம்எல்ஏ அலுவலகம் முன்பு, அவரது படத்திற்கு எம்எல்ஏ முருகேசன் மலர்தூவி மரியாதை செய்தார். இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி நகர்மன்ற தலைவர் சேதுகர் கருணாநிதி, நகர் வடக்கு செயலாளர் ஜீவரத்தினம், மாவட்ட சிறுபான்மையர் பிரிவு துணை அமைப்பாளர் மாலிக் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். 33வது வார்டு சந்தைக் கடைத்தெருவில் வார்டு செயலாளர் வீரபாண்டியன், நகர் இளைஞர் அணி தர்மராஜா ஆகியோரது ஏற்பாட்டில் கலைஞரின் படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

மதிமுக சார்பில் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் குணா ஏற்பாட்டில், பொதுக்குழு உறுப்பினர்கள் பழ சரவணன் உள்பட நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். போகலூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக ஒன்றிய செயலாளர் கதிரவன் தலைமையில் சத்துர குடி பேருந்து நிலையம் அருகே கலைஞரின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.போகலூர் மேற்கு ஒன்றியம் சார்பாக ஒன்றிய செயலாளர் குணசேகரன் தலைமையிலும்,போகலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சத்யா குணசேகரன், பொட்டிதட்டி ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் ஆகியோர் கலைஞர் படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

பரமக்குடி கிழக்கு ஒன்றியம் சார்பாக ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமையில், ஒன்றிய துணைச் செயலாளர் சந்திரன், பரமக்குடி மேற்கு ஒன்றியம் சார்பாக ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பார்த்திபனூரில் கலைஞரின் படத்திற்கு மரியாதை செய்தனர். நயினார்கோவில் கிழக்கு ஒன்றியம் சார்பாக ஒன்றிய செயலாளர் அண்ணாமலை தலைமையிலும், நயினார்கோவிலில் கிளைக் கழகம் சார்பாக கிளை செயலாளர் அரசு மணி தலைமையில் கலைஞர் படத்திற்கு மரியாதை செய்யப்பட்டது.

The post பரமக்குடி பகுதியில் கலைஞர் படத்திற்கு மலர்தூவி மரியாதை appeared first on Dinakaran.

Tags : Paramakkudy ,MLA ,Paramakkudy, MLA ,
× RELATED பரமக்குடி நகர்மன்றத்துக்கு நிரந்தர...