×

கருணாநிதி நினைவு தினம் நகர்மன்ற தலைவர் நலஉதவி

திருவாரூர், ஆக.8: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி திருவாரூரில் நலத்திட்ட உதவிகளை நகர்மன்ற தலைவர் புவனப்பிரியாசெந்தில் வழங்கினார். தமிழக முன்னாள் முதல்வரும் திமுகவின் தலைவருமான கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திருவாரூர் எம்.எல்.ஏ அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு நகர செயலாளரும், நகராட்சி நியமனக்குழு உறுப்பினருமான வாரைபிரகாஷ் தலைமையில் நகர்மன்ற தலைவர் புவனப்பிரியாசெந்தில் மற்றும் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் வேட்டி, புடவை, தென்னங்கன்றுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் நகர்மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில் வழங்கினார்.
நிகழ்ச்சியில் நகராட்சி கவுன்சிலர்கள் செந்தில், சங்கர், சின்னவீரன், வரதராஜன், அய்யனார், அசோகன், அன்வர்உசேன், கருணாநிதி, கஸ்தூரிமணிராவ், உமாமகேஸ்வரி, பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post கருணாநிதி நினைவு தினம் நகர்மன்ற தலைவர் நலஉதவி appeared first on Dinakaran.

Tags : Karunanidhi Memorial Day City Council ,President ,Thiruvarur ,DMK ,Karunanidhi ,Municipal President ,Bhuvanapriyasendhil ,Tiruvarur.… ,Karunanidhi Memorial ,Day Municipal ,Dinakaran ,
× RELATED திருவாரூர் ஒன்றியக்குழு சாதாரண கூட்டம்