×

5ம் வகுப்பு மாணவன் உடல் மீட்பு

இடைப்பாடி, ஆக.8: இடைப்பாடி அருகே தேவூர் மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன்(37). இவரது இளைய மகன் நித்திஸ்(11), அங்குள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், நேற்று காலை நித்திஸ் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி, அவனது உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் அவசரம், அவசரமாக உடலை மயானத்திற்கு கொண்டு சென்றனர். இதுகுறித்த தகவலின்பேரில், தேவூர் ஆர்ஐ கலைச்செல்வி, காவேரிப்பட்டி விஏஓ செந்தில்குமார், உதவியாளர் முருகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று இறுதி ஊர்வலத்தை தடுத்து நிறுத்தினர்.

பின்னர், மாணவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு இடைப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, மாணவன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் இடத்தில், சங்ககிரி இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் வருவாய்த்துறையினர் சோதனை செய்தனர். அங்கு, மாணவன் தூக்கு போட்டதாக கூறப்படும் அறை மிகவும் தாழ்வாக இருந்தது. அந்த அறையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை. அதே வேளையில் சம்பவத்தின்போது சிறுவனின் தாத்தா வீட்டிற்கு வெளியே இருந்துள்ளார். சம்பவம் குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மாணவன் கொலை செய்யப்பட்டு, தூக்கில் தொங்க விடப்பட்டானா என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post 5ம் வகுப்பு மாணவன் உடல் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Eadhapadi ,Iswaran ,Devur Motor ,Nidhis ,
× RELATED மழையின் காரணமாக தடைபட்ட பாலம் கட்டுமான பணி துவக்கம்