×

சோளம் விதைகள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

மல்லசமுத்திரம், ஆக.8: மல்லசமுத்திரம் வட்டாரத்தில், உயர் விளைச்சல் ரக சோள விதைகள், 50 சதவீத மானியத்தில் விநியோகம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து, வட்டார உதவி இயக்குனர் யுவராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மல்லசமுத்திரம் வட்டாரத்தில், ஆடிப்பட்டம் தொடங்கியுள்ள நிலையில், உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புத் திட்டம்- ஊட்டமிகு சிறு தானியங்கள் திட்டத்தில், உயர் விளைச்சல் தரக்கூடிய ரகமான கோ 32 சோளம் சான்று விதைகள், 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் ஒரு எக்டருக்கு 10 கிலோ வீதம், அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு இரண்டு எக்டர் வரை வழங்கப்படும். சோளம் விதைகள் தேவைப்படும் விவசாயிகள் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் மல்லசமுத்திரம், மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையம் வையப்பமலை உள்ளிட்ட அலுவலகங்களை நேரில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சோளம் விதைகள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Mallasamutram ,Dinakaran ,
× RELATED முதியவர் சாவில் மர்மம்