×

மகாராஷ்டிரா மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் கைது: பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை நள்ளிரவில் அதிரடி நடவடிக்கை..!

மும்பை: மகாராஷ்டிரா மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார். பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மும்பையில் பார்கள் மற்றும் ஓட்டல்களில் 1 மாதத்திற்கு 100 கோடி ரூபாய் மாமூல் வசூலிக்க போலீசாரை கட்டாயப்படுத்தியதாக தேசியவாத கட்சியை சேர்ந்த அனில் தேஷ்முக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் பதவியை ராஜினாமா செய்த தேஷ்முக் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மும்பை மற்றும் நாக்பூரில் உள்ள அவரது வீடுகளில் சோதனை நடத்திய அதிகாரிகள் ரூ.4.20 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கினர். இதனிடையே பணிநீக்கம் செய்யப்பட உதவி ஆய்வாளர் சச்சின் வாசியால் உதவியுடன் மும்பை மதுபான விடுதி உரிமையாளரிடம் இருந்து ரூ.4.70 கோடி வசூலிக்கப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. மேலும் போலி நிறுவனத்தின் பேரில் சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக கூறிய அமலாக்கத்துறை அவர் மீது பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இது குறித்து விசாரணைக்கு ஆஜராகும் படி அனில் தேஷ்முக்கிற்கு 5 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. சம்மனை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி ஆனதை அடுத்து நேற்று காலை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தேஷ்முக் ஆஜரானார். அவரிடம் 12 மணி நேரம் விசாரணை நடத்திய அதிகாரிகள் நள்ளிரவில் அனில் தேஷ்முக்கை கைது செய்தனர்….

The post மகாராஷ்டிரா மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் கைது: பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை நள்ளிரவில் அதிரடி நடவடிக்கை..! appeared first on Dinakaran.

Tags : Former ,Maharashtra ,Home ,Enforcement Department ,Mumbai ,Home Minister ,Anil Deshmukh ,Minister ,
× RELATED பேருந்தும், லாரியும் மோதி விபத்து: 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!