×

ரூ.9.50 கோடி மதிப்பீட்டில் மணலி ஏரியை தூர்வாரி சீரமைக்க முடிவு: விரைவில் பணிகள் தொடக்கம்


திருவொற்றியூர்: மணலி ஏரியை ரூ.9.50 கோடி செலவில் தூர்வாரி சீரமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. மணலி மற்றும் மாதவரம் மண்டலத்திற்கு உட்பட்ட காமராஜ் சாலையை ஒட்டி இருபுறமும் சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட மணலி ஏரி உள்ளது. மழை காலத்தில் சுற்றுவட்டாரத்தில் இருந்து வரக்கூடிய மழைநீர் இங்கு வந்து தேங்குவதால் பொதுமக்களுக்குத் தேவையான நிலத்தடி நீரை பாதுகாக்கும் ஏரியாக இது பயன்பட்டு வருகிறது.

இந்த ஏரி தற்போது சேறும், சகதியுமா தூர்ந்து கிடப்பதால், மழை காலத்தில் சுற்றுவட்டாரத்தில் இருந்து வரக்கூடிய மழைநீர் இந்த ஏரியில் தேங்காமல் வெளியேறி, அக்கம் பக்கத்தில் உள்ள குடியிருப்புகளில் புகுந்து விடுகிறது. மேலும் சேமிப்பதற்கு போதிய வசதி இல்லாததால் மழை நீரும் வீணாகிறது. எனவே, இந்த ஏரியை தூர்வாரி கரைகளை பலப்படுத்தி, சீரமைக்க வேண்டும் என்று மண்டலக்குழு தலைவர்கள் நந்தகோபால், ஏ.வி.ஆறுமுகம் ஆகியோர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து வடக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுருபிரபாகரன் ஐஏஎஸ் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் இந்த ஏரியை ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.9 கோடியே 55 லட்சம் செலவில் ஏரியை தூர்வாரி சுற்றிலும் கரை அமைத்து பொதுமக்கள் நடைபயிற்சி செய்யவும், பசுமையான செடிகளை நடவும் திட்டமிடப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டு விரைவில் இந்த பணிகள் தொடங்கப்பட உள்ளது.

The post ரூ.9.50 கோடி மதிப்பீட்டில் மணலி ஏரியை தூர்வாரி சீரமைக்க முடிவு: விரைவில் பணிகள் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Lake Manali ,Thiruvottriyur ,Manali Lake ,Manali Lake Drigger ,Dinakaran ,
× RELATED நடைபாதை, பூங்கா வசதியுடன் மணலி ஏரி...