×

திட்டப் பணிகள் குறித்து ஆவடியில் கலந்தாய்வு கூட்டம்

ஆவடி: ஆவடி மாநகராட்சியில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்டப் பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. ஆவடி மாநகராட்சியில், கடந்த 2008ல் பாதாள சாக்கடை திட்டத்துக்கு ரூ.158 கோடி, குடிநீர் திட்டத்துக்கு ரூ.113 கோடி என மொத்தம் ரூ.271 கோடி மதிப்பீட்டில் பணிகள் துவங்கப்பட்டன. அடுத்தகட்ட குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்கு, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு திட்ட அறிக்கைகள் தயார் செய்யும் பணிகள், தனியார் நிறுவனத்தின் மூலம் மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், அந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கான பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம் நேற்று காலை, மாநகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது.

இதில், மாநகராட்சி செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து குடியிருப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களிடம் ஆவடி மாநகராட்சி கமிஷனர் தர்ப்பகராஜ் விவாதித்தார். இக்கூட்டத்தில் பொறியாளர் ரவிச்சந்திரன், சங்கர் மற்றும் ஆவடி 48 வார்டுகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். கடந்த 15 ஆண்டுகளுக்குப் பின், ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளிலும் விடுபட்ட இடங்களில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்டத்தை மேற்கொள்ள உலக வங்கியிடம் மாநகராட்சி கடன் பெற உள்ளது. அதற்கான ஆய்வு, திட்ட அறிக்கை தயார் செய்தல் உள்ளிட்ட பணிகளை தனியார் நிறுவனம் மூலம் ஆவடி மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

The post திட்டப் பணிகள் குறித்து ஆவடியில் கலந்தாய்வு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Avadi ,Aavadi ,Aavadi Corporation ,Dinakaran ,
× RELATED ஆவடி காவல் ஆணையரகத்தில் சோதனை...