×

கடன் தள்ளுபடி விவகாரத்தில் குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன்: ஒன்றிய அமைச்சர் சவால்

தார்வார்: கர்நாடகா மாநிலம் அல்நாவரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘காங்கிரஸ் தலைவர்கள் ஒன்றிய அரசின் அனைத்து திட்டங்களையும் எதிர்ப்பதில் தீவிரமாக உள்ளனர். குறிப்பாக பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்புவதில் குறியாக உள்ளனர். எங்களது அரசு, அரசியலமைப்பு சட்டத்தின்படி செயல்படுகிறது. தொழிலதிபர்களுக்கான கடனை ஒன்றிய அரசு தள்ளுபடி செய்தது என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் கூறி வருகின்றனர். அதனை அவர்கள் நிரூபிக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் கூறிய குற்றச்சாட்டை நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன். இல்லையெனில், அவர்கள் ஓய்வு பெற வேண்டும். வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எங்களது முயற்சியின் பயனால், சில வெற்றிகளும் கிடைத்துள்ளது’ என்றார்.

The post கடன் தள்ளுபடி விவகாரத்தில் குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன்: ஒன்றிய அமைச்சர் சவால் appeared first on Dinakaran.

Tags : Dharwar ,Union Parliamentary Affairs Minister ,Pragalad Joshi ,Alnawar, Karnataka ,
× RELATED பாஜ கலக்கம்: ஒன்றிய அமைச்சருக்கு எதிராக மடாதிபதி போட்டி