×

ஆடி கிருத்திகையொட்டி காவடி விற்பனை மும்முரம்

காஞ்சிபுரம்: ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, காஞ்சிபுரத்தில் காவடி விற்பனை மும்முரமாக நடைபெற்றது. ஆடிக்கிருத்திகை நாளில் அனைத்து முருகன் கோயில்களிலும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம், என கொண்டாட்டமாக உற்சவங்கள் நடைபெறும். முருகன் கோயில்களில் எல்லாம் கந்தனுக்கு அரோகரா என்ற பக்தி முழக்கம் விண்ணை எட்டும். முருகப்பெருமானுக்கு அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ப பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மச்சக்காவடி, சேவல் காவடி, தீர்த்தக் காவடி என பல்வேறு விதமாக காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவர்கள்.

அதன் அடிப்படையில், காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோயிலில் நாளை (ஆக.9) ஆடிக்கிருத்திகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதற்காக காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம் எதிரில் வேங்கை, அத்தி, புங்கன் மரத்தில் செய்யப்பட்ட பூக்காவடி, உருட்டுக்காவடி, மடிப்பு காவடி விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த காவடி ரூ.1000 முதல் ரூ.1500 வரை விற்பனை செய்யப்படுகிறது.

The post ஆடி கிருத்திகையொட்டி காவடி விற்பனை மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Kavadi ,Audi ,Kritika ,Kanchipuram ,Aadik Krithikai ,Adi Kritika ,Murugan ,
× RELATED மோகனூர் முருகன் கோயிலில் சிறப்பு பூஜை