×

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஐஎப்எஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா: சென்னையில் நடந்தது

சென்னை: ஐஎப்எஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சென்னையில் பாராட்டு விழா நடந்தது. அமைச்சர் மதிவேந்தன் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்திய இந்திய வனப்பணி தேர்வு (ஐஎப்எஸ்) தேர்வில் இந்திய அளவில் 147 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் 102 பேர் சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமியில் படித்தவர்கள். இந்நிலையில் 2022ம் ஆண்டு ஐஎப்எஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழா சென்னை அண்ணா நகரில் உள்ள சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியில் நடந்தது. விழாவிற்கு அகடாமி நிர்வாக இயக்குனர் வைஷ்னவி சங்கர் தலைமை தாங்கினார். 2016ம் ஆண்டில் ஐஎப்எஸ் தேர்வில் வெற்றி பெற்று ஆந்திர மாநிலத்தில் மாவட்ட வன அதிகாரியாக பணி புரியும் ஜி.ஜி.நரேந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.

விழாவில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டு ஐஎப்எஸ் தேர்வில் வெற்றி பெற்ற பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். அப்போது அவர் பேசுகையில், ‘‘தமிழ்நாடு அரசு கடந்த 2 ஆண்டுகளில் வன வளங்களை பாதுகாப்பதில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தமிழ்நாடு சதுப்புநிலங்கள் பாதுகாப்பில் நாட்டிலேயே முதல் மாநிலமாக உள்ளது. மேலும் இந்தியாவிலேயே கடல் வள பாதுகாப்பிற்கு சிறப்பு படை ஏற்படுத்திய முதல் மாநிலம் தமிழ்நாடு தான்’’ என்றார். விழாவில் தமிழக அளவில் பெண்களில் முதலிடம் பெற்ற வைஷாலி மற்றும் வெற்றி பெற்ற அனைவருக்கும் விருதுகள் வழங்கப்பட்டது. விழாவில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

The post மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஐஎப்எஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா: சென்னையில் நடந்தது appeared first on Dinakaran.

Tags : IFS ,Central Government Staff Selection Commission ,Chennai ,Minister ,Madivendan ,Dinakaran ,
× RELATED யுபிஎஸ்சி தேர்வுகளில் பின்தங்கும் தமிழக மாணவர்கள்