×

திமுக இளைஞரணியில் 90 சதவீத பட்டதாரிகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு

ஆலந்தூர்: திமுக இளைஞரணியில் தற்போது 90 % பட்டதாரிகள் உள்ளனர், என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியுள்ளார். ஆலந்தூர் தெற்கு பகுதி 162வது வட்ட திமுக சார்பாக கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு, 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 120 மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகையாக தலா ₹2 ஆயிரம் வழங்கும் விழா, ஆலந்தூரில் நேற்று நடந்தது. 162வது வார்டு மாமன்ற உறுப்பினர் சாலமன் தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் சரவணா, தெற்கு பகுதி அவைத்தலைவர் சுந்தரராஜன், மாவட்ட பிரதிநிதி வெற்றிவேல், அவைத் தலைவர் துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு 120 மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினர். தொடர்ந்து, அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், ‘‘மறைந்த பேராசிரியர் க.அன்பழகன் பெயரில் உள்ள கல்வி நிதி ₹7,500 கோடியில் 260 பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன. மாணவர்களுக்குத் தேவையான உதவிகளை அரசு செய்து வருகிறது. மாணவியர்கள் உயர்கல்வி படிக்க ₹1,000 வழங்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்தது. கொரோனாவிற்கு பிறகு மாணவர்கள் சேர்க்கை 2 லட்சமாக உயர்ந்துள்ளது. 1985-86களில் திமுக இளைஞர் அணிக்கு உறுப்பினர்களை சேர்த்தபோது 5,6 பட்டதாரிகளே இருந்தனர்.

இன்றைக்கு திமுக உறுப்பினர் சேர்க்கையில் 90 சதவீதம் பட்டதாரி இளைஞர்கள் உள்ளனர். தற்போது திமுக ஆட்சியில் மாணவர்களுக்கு படிக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது,’’ என்றார். இந்த விழாவில், ஆலந்தூர் மண்டலக்குழு தலைவர் என்.சந்திரன், வடக்கு பகுதி திமுக செயலாளர் பி.குணாளன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோல்டு பிரகாஷ் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் ஜெயராம் மார்த்தாண்டன், பாபு, செய்யது அபுதாகிர், ஏசுதாஸ், நடராஜன் வேலவன், முரளிகிருஷ்ணன், சீனிவாசன், மகேந்திரன், வினோத்குமார், பாலச்சந்தர், ரமேஷ், அஷ்டலட்சுமி, நீலமேகம், கனக சதீஷ், தீனதயாளன், கன்னியப்பன், மகேஷ் மாதவன், பாலசுப்பிரமணி, சரவணன், பெரோஸ்கான், சண்முகம், மீன் மோகன், கார்த்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திமுக இளைஞரணியில் 90 சதவீத பட்டதாரிகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : DMK Youth ,Minister Thamo Anparasan ,Alantur ,Alandur South Region ,DMK ,Minister ,Thamo Anparasan ,Dinakaran ,
× RELATED சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி...