×

முபாதலா டிசி ஓபன் டென்னிஸ்: கோகோ காஃப் சாம்பியன்

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்த முபாதலா சிட்டி டிசி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் உள்ளூர் நட்சத்திரம் கோகோ காஃப் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் கிரீஸ் வீராங்கனை மரியா சாக்கரியுடன் மோதிய கோகோ 6-2, 6-3 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்று கோப்பையை முத்தமிட்டார். ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (2015), ஜெஸ்ஸிகா பெகுலா (2019) ஆகியோரை தொடர்ந்து, இந்த தொடரில் பட்டம் வென்ற 3வது அமெரிக்க வீராங்கனை மற்றும் மிக இளம் வயது (19 வயது) வீராங்கனை என்ற பெருமை கோகோவுக்கு கிடைத்துள்ளது.

இதே தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இங்கிலாந்தின் டேனியல் எவன்ஸ் (33 வயது) 7-5, 6-3 என்ற நேர் செட்களில் நெதர்லாந்தின் டாலான் கிரீக்ஸ்பூரை (27 வயது) வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். 2003ல் இங்கு பட்டம் வென்ற டிம் ஹென்மேனுக்கு பிறகு சாம்பியனாகும் முதல் இங்கிலாந்து வீரர் டேனியல் எவன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

The post முபாதலா டிசி ஓபன் டென்னிஸ்: கோகோ காஃப் சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Mubadala DC Open Tennis ,Koko Goff ,Washington ,Koko ,Mubadala City DC Open Tennis Series ,USA ,Koko Coff ,Dinakaran ,
× RELATED X தளத்தில் புதிதாக இணையும் பயனர்கள்...