×

குமரி மாவட்டத்தில் ஆடி அமாவாசை, குழித்துறை வாவுபலி கொண்டாட்டத்தை ஒட்டி 16-ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கன்னியாகுமரி: ஆடி அமாவாசை, குழித்துறை வாவுபலி கொண்டாட்டத்தை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் 16-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுகட்டும் விதமாக செப்.9-ம் தேதி அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள உத்தரவில்:
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆடி அமாவாசை மற்றும் குழித்துறை நகராட்சியால் நடத்தப்படும் வாவுபலி கொண்டாட்டத்திற்கு 16.08.2023 (புதன் கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது. 16.08.2023 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2023 செப்டம்பர் திங்கள் இரண்டாவது சனிக்கிழமை (09.09.2023) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும்.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆடி அமாவாசை மற்றும் குழித்துறை நகராட்சியால் நடத்தப்படும் வாவுபலி கொண்டாட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச் சட்டம் 1881 (Under Negotiable Instruments Act 1881) -இன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் 16.08.2023 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு. தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என இதன் மூலம் ஆணையிடப்படுகிறது. என கூறப்பட்டுள்ளது.

The post குமரி மாவட்டத்தில் ஆடி அமாவாசை, குழித்துறை வாவுபலி கொண்டாட்டத்தை ஒட்டி 16-ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Adi Amavasa ,Puttraru Vavubali ,Kumari District ,Kanyakumari ,Puditra Vavabali ,Local Holiday ,
× RELATED கன்னியாகுமரியில் கொட்டி தீர்த்த கனமழை; மக்கள் மகிழ்ச்சி..!!