×

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய திட்டம்

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆலை அமைக்க முடிவு செய்துள்ளது. டெஸ்லா இந்தியாவில் உற்பத்தி செய்ய உள்ள காரின் விலை சுமார் ரூ.20 லட்சம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலை இந்த மாதம் சந்திக்க உள்ளதாக நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கார் இறக்குமதிக்கான வரிகளை தவிர்க்கும் வகையில் இந்தியாவில் கார்கள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்த கார்கள் இந்தியச் சந்தையில் விற்பனை செய்வதற்கு மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. இந்தியாவின் எலக்ரிக் கார் சந்தை, மொத்த விற்பனையில் சுமார் 2 சதவீதம் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய திட்டம் appeared first on Dinakaran.

Tags : Tesla ,India ,Dinakaran ,
× RELATED முக்கிய நகரங்களில் வெயில் வாட்டி...