ஹைதராபாத்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியூசிலாந்து முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை இறுதிப்போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. 2016ம் ஆண்டு முதல் 2020 வரை நடைபெற்ற ஐபிஎல் சீசன்களில் அனைத்திலும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது.
இதையடுத்து நடைபெற்ற ஐபிஎல் சீசன்களில் சன்ரைசர்ஸ் அணி பெரிதாக சோபிக்கவில்லை. இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடிய 14 போட்டிகளில் 4ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. பிரையன் லாரா, முத்தையா முரளிதரன், டேல் ஸ்டெயின் என ஜாம்பவான் பயிற்சியாளராக இருந்தபோதிலும் சன்ரைசர்ஸ் அணியால் சிறப்பாக செயல்பட முடியவில்லை.
இதனால் பயிற்சியாளர் குழுவை மாற்ற ஹைதராபாத் அணி நிர்வாகம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் ஹைதராபாத் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், ஆர்சிபி அணியின் முன்னாள் பயிற்சியாளருமான டேனியல் வெட்டோரியை அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. இவர் தற்போது வங்கதேச அணியின் சுழற்பந்துவீச்சு ஆலோசகராகவும் டேனியல் விட்டோரி பணியாற்றி வருகிறார்.
The post சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியூசிலாந்து முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி நியமனம் appeared first on Dinakaran.