×

கலாஷேத்ரா விவகாரம்: ஹரிபத்மனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணை குழு அறிக்கை

சென்னை: கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் தலைமையிலான விசாரணை குழுவின் அறிக்கை வெளியிட்டுள்ளது. கலாஷேத்ரா அறக்கட்டளை தலைவர் ராமதுரைக்கு பல்வேறு பரிந்துரைகளை விசாரணை குழு வழங்கியது. ஹரிபத்மனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவும் அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது. அறிக்கையின் அம்சங்களை பொதுவெளியில் வெளியிட வேண்டாம் என்றும் விசாரணை குழு அறிவுறுத்தியுள்ளது.

சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் ருக்மணி தேவி நுண்கலை கல்லூரியில் படிக்கும் மாணவிகள் பலர் பேராசிரியர் ஹரிபத்மன் மற்றும் உதவி நடன கலைஞர்களான சாய் கிருஷ்ணன், சஞ்ஜித் லால், ஸ்ரீநாத் என 4 பேர், பாலியல் தொந்தரவு கொடுப்பதாக, அந்நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். மாணவிகள் அளித்த புகார் தொடர்பாக தேடப்பட்டு வந்த ஹரிபத்மன் கடந்த ஏப்ரல் மாதம் 3ம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து 60 நாட்களுக்கும் மேலாகச் சிறையில் இருந்த ஹரிபத்மனுக்கு கடந்த ஜூன் 6ம் தேதி நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தது.

அதைதொடர்ந்து பாலியல் வழக்கு தொடர்பாக முன்னாள், மற்றும் தற்போது படித்து வரும் மாணவிகள் என 169 பேருக்கு சம்மன் அனுப்பினர். அதில் 162 மாணவிகள் நேரில் ஆஜராகினர். அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் அளித்த பதிலை வாக்கு மூலமாக பதிவு செய்து கொண்டனர். இதையடுத்து கலாஷேத்ரா மாணவிகளின் பாலியல் வழக்கில் அடையார் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை முடித்து குற்றப்பத்திரிக்கை தயார் செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் 250 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று ஹரிபத்மனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க விசாரணை குழு பரிந்துரைத்துள்ளது. மாணவிகள் நடத்திய தொடர் போராட்டத்தின் காரணமாக கலாஷேத்ரா சார்பில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கண்ணன் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு பல்வேறு மாணவிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் தற்போது 58 பக்கங்கள் கொண்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

அதில் கலாஷேத்ரா அறக்கட்டளை தலைவர் ராமதுரைக்கு பல்வேறு பரிந்துரைகளை விசாரணை குழு வழங்கியது. ஹரிபத்மனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவும் அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது. அறிக்கையின் அம்சங்களை பொதுவெளியில் வெளியிட வேண்டாம் என்றும் விசாரணை குழு அறிவுறுத்தியுள்ளது.

The post கலாஷேத்ரா விவகாரம்: ஹரிபத்மனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணை குழு அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Kalashetra ,Haripadman ,CHENNAI ,Kannan ,Kalashetra… ,Dinakaran ,
× RELATED பாலியல் தொல்லை கொடுத்தாக முன்னாள்...