×

ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி

திருவனந்தபுரம்:கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள வைக்கம் அரயன்காவு பகுதியைச் சேர்ந்தவர் ஜான்சன் (56). இவருக்கு ஜோபி என்ற தம்பியும், சுனி என்ற தங்கையும் உள்ளனர். ஜோபி குடும்பத்துடன் லண்டனில் வசித்து வருகிறார். இவரது மகள் ஜிஸ் மோள் (15). சுனியின் மகன் அலோஷி (16).

இந்தநிலையில் நேற்று ஜான்சன் அலோஷி, ஜிஸ் மோள் உள்பட அவர்களது குடும்பத்தை சேர்ந்த 7 பேர் அங்குள்ள ஒரு ஆற்றில் குளிப்பதற்காக சென்றனர். அப்போது பாறை மீது நின்று கொண்டிருந்த ஜிஸ் மோள் திடீரென வழுக்கி ஆற்றில் விழுந்தார்.

அவர் தண்ணீரில் மூழ்குவதை பார்த்ததும் உடனே அவரை காப்பாற்றுவதற்காக ஜான்சனும், அலோஷியும் ஆற்றில் குதித்தனர். ஆனால் அவர்களும் தண்ணீரில் மூழ்கினர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மீட்பு படை வீரர்கள், 2 மணிநேர தேடுதலுக்கு பிறகு 3 பேரின் சடலங்களையும் மீட்டனர். பின்னர் உடல்களை பிரேத பரிசோதனைக்காக கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வைக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Johnson ,Vakkam Arayangavu ,Kottayam, Kerala ,
× RELATED போதைப் பொருட்கள் விற்க எதிர்ப்பு; வாலிபர் சரமாரி வெட்டிக் கொலை